/tamil-ie/media/media_files/uploads/2019/10/mano.jpg)
Actor Mano death, Actor Mano death in accident, mano death, mano accident death, மனோ மரணம், நடிகர் மனோ மரணம், நடிகர் மனோ விபத்தில் மரணம், மானாட மயிலாட மனோ மரணம், actor mano, maanada mayilaada actor mano, dancer mano, singer mano, mano dead, tv actor mano death
Actor Mano death: கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் மனோ சென்னை ஆவடி அருகே திங்கள்கிழமை அவருடைய கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மனோ கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’, விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். மனோ நடிகர், பாடகர், டான்ஸர் என்ற பல முகங்களுக்குச் சொந்தக்காரர். டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான மனோவுக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தன. அதன்படி ‘புழல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். விஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில், நடிகர் மனோ தனது மனைவியுடன் காரில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சென்னை ஆவடி அருகே கார் தீடீரென நிலைதடுமாறி சாலை தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மனோவின் மனைவி லிவியா தனியார் மருத்துவமனையில் திவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் மனோ - லிவியா தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.
மனோவின் மரணத்துக்கு நடிகர் மதுரை முத்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். நடிகர் மனோ பாலா மீண்டும் ஒரு இழப்பு என்று மனோவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Once more loss...RIP Mano pic.twitter.com/m5dWKs9vaI
— manobala (@manobalam) October 29, 2019
நடிகர் மனோவின் மரணம் சின்னத்திரையுலகிலும் தமிழ் சினிமா உலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.