/indian-express-tamil/media/media_files/2025/03/26/TW5ZTIE9XKKNGFcpNvfl.jpg)
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 48 வயதிலேயே அவர் உயிரிழந்துள்ளது பாரதிராஜா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023-ல் வெளியான "மார்கழி திங்கள்" படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
மனோஜ் பாரதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு டூப்பாக நடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. எந்திரன் படத்தில்தான் அவர் ரஜினிக்கு டூப் போட்டுள்ளார்.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ், அப்படத்தில் ரஜினி சிட்டி ரோபோவாக ஐஸ்வர்யா ராயுடன் காரில் பயணிக்கும் காட்சியில் ரஜினிக்கு டூப் போட்டு நடித்தவர் மனோஜ் பாரதிராஜாதான். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் கடைசியாக "ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ்" என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். இந்நிலையில், மனோஜ் பாரதி மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மனோஜ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், த.வெ.க. தலைவர் விஜய், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ம.நீ.ம. தலைவர் கமல், இயக்குநர் சங்கம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மனோஜ் பாரதி மறைவுக்கு இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் சந்தானபாரதி, நடிகர்கள் பிரபு, சிவக்குமார், சூர்யா, கார்த்தி, கஞ்சா கருப்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர் மனோஜ் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு
நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா இல்லத்தில் திரை உலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில்,
மகனே மனோஜ்!
— வைரமுத்து (@Vairamuthu) March 26, 2025
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன்… pic.twitter.com/ngB7b1Crel
"மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா? பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா? 'சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா' என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா? உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா? முதுமை - மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், முதுமை. வயதுபார்த்து வருகிறது; மரணம் வயதுபார்த்து வருவதில்லை சாவுக்குக் கண்ணில்லை எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்" என தன் துயரை எனக் கூறியுள்ளார்.
மனோஜை அறிமுகப்படுத்திய வைரமுத்து:
பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மகால் படத்தின் மூலம் தான் முதன் முதலில் தமிழ் மக்களிடம் அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் பாடல்கள் படம் வெளிாகும் முன்பே நல்ல ஹைப்பை கொடுத்ததால், படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் அந்தப் படத்தில் வரும் திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா பாடல், அந்த காலத்து இளைஞர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம் பெற்ற பாடல். ஹீரோவுக்கான அறிமுகப் பாடலான இதனை வைரமுத்து தான் மனோஜிற்காக எழுதி இருப்பார். பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்த இந்தப் பாடலை நினைவு கூர்ந்து இப்போது மனோஜின் மறைவை நினைத்து வருந்தி பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.