MK Alagiri – Actor Prabhu Tamil News: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மதுரை சத்யசாய் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த நடிகர் பிரபு, மு.க. அழகிரியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார். அண்மையில் மதுரைக்கு வருகை தந்த தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது நடிகர் பிரபு மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.

சிவாஜியின் தீவிர ரசிகர் மு.க.அழகிரி என்பதால் நடிகர் பிரபு நேரில் சந்தித்ததாகவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil