scorecardresearch

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக நடிகர் ராஜேஷ் – தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu News: தமிழ் சினிமா நடிகரான ராஜேஷை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக நடிகர் ராஜேஷ் – தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu News: தமிழ் சினிமா நடிகரான ராஜேஷை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பல தரப்பட்டத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாராகி வருகிறது.

இவ்வாறு கூறப்படும் நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்களையும், திரைப்படத் துணைப்பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே இந்த நிறுவனத்தின் முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது.

மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது.

ஆகையால், தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor rajesh became a chairman of mgr film and television training institute