Advertisment

பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு : மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினி அதிரடி

ரஜினிகாந்தின் அந்த கருத்து மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Rajinikanth requests tn government to give compensation

Coronavirus Rajinikanth requests tn government to give compensation

Actor Rajinikanth controversial speech on Periyar : துக்ளக் பத்திரிக்கையின் 50-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் குடியரசு துணைத் தலைவர், ரஜினி காந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ரஜினி காந்த் துக்ளக் பத்திரிக்கை குறித்து பேசினார்.

Advertisment

பிறகு ”1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார், இந்திய மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிற ராமர் மற்றும் சீதையை தவறாக சித்தகரித்து செருப்பு மாலை அணிவித்தார்” என்று மேற்கொள் காட்டினார்.

ஏற்கனவே துக்ளக் பத்திரிக்கை வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்றும், முரசொலி பத்திரிக்கை வைத்திருப்பவர்கள் திமுக காரர்கள் என்று பேசி திமுகவினரால் ட்ரோல் செய்யப்பட்டார் ரஜினி காந்த். அதே மேடையில் இதையும் பேச, ரஜினி மீது கோவையில் திராவிட கழகத்தினர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

மேலும் படிக்க : ”துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி” – ரஜினியின் பேச்சுக்கு நெட்டிசன்களின் கருத்து என்ன?

மன்னிப்பு கேட்க இயலாது - ரஜினி திட்டவட்டம்

துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு நாளில் நான் பேசியது பெரிய சர்ச்சையாக இருக்கிறது. 71ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று கூறுகின்றனர். இது இந்துவின் அவுட்லுக். இதிலும் 2017ம் ஆண்டு வெளியான இதழில் 1971ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் ராமன்-சீதை படத்தில் ஆடைகள் இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் ஒன்றும் இல்லாததை கூறவில்லை. நடக்காத ஒன்றை கூறவில்லை. இது போன்ற இதழ்களில் வந்ததை தான் நான் கூறினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் என்னால் மன்னிப்பு கூறவோ, வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பெரியார் ஊர்வலத்தில் ராமர், சீதை படம் மீது செருப்பு வீசப்பட்டதா? – ‘பச்சை பொய்’ என ரஜினி கருத்துக்கு திக எதிர்ப்பு

ரஜினி மீது புதுவையிலும் புகார்

ரஜினிகாந்தின் அந்த கருத்து மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை காவல் நிலையத்தின் கிழக்கு கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பெரிய கடைகாவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Periyar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment