நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், ஆன்மிக அரசியலை கொண்டு வர இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார். அவரின் கட்சிக்கான பெயர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ள ரஜினி, 'எம்.ஜி.ஆர்., ஆட்சியை தருவேன்' என, அதிரடியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக இமயமலை செல்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
போயஸ்கார்டன் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “ இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன். அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன். முதலில், தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன்” என்று கூறினார்.
அரசியல் மற்று காவிரி மேலாண்மை வாரியம் குறித்து செய்தியாளர்களுக்கு எழுப்பி கேள்விக்கு அவரி பதில் அளிக்க மறுத்துவிட்டார்..இ ந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு ரஜினி சென்று, அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.