புகைப்படங்கள்: ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் ரஜினிகாந்த்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் மடத்துக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு சிறிதுநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் மடத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு சிறிதுநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.

ரஜினிகாந்தின் வருகையால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அவரைக் காண ஏராளமானோர் திரண்டனர்.

கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி தன் அரசியல் வருகையை அறிவித்த ரஜினிகாந்த், தான் ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். நேர்மையான மற்றும் தர்மமான அரசியல் தான் ஆன்மிக அரசியல் என அவர் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பார் என பரவலாக கருத்து நிலவிவரும் நிலையில், ராகவேந்திரர் மடத்துக்கு சென்று ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close