தனி டிவி சேனல் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்? பெயர்களின் தேர்வும் முடிந்தது

புதிய சேனல் தொடங்க இருக்கும் ரஜினி மக்கள் மன்றம்

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கி, அரசியலுக்குள் பிரவேசிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தனி டிவி சேனல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது கட்சிக்கு பிரச்சார ஆயுதமாக புதிய பத்திரிகை, இணைய தளம் மற்றும் டிவி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ரஜினிகாந்த் புதிய சேனல்

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் பெயரில் ரஜினியின் ஆங்கில கையெழுத்துடன் ஒரு ‘ஆட்சேபணையில்லா கடிதம்’ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி மற்றும் தலைவர் டிவி போன்ற பெயர்களைப் பயன்படுத்த ஆட்சேபணை இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளதாகக் காணப்படுகிறது.

rajinikanth new tv channel, ரஜினிகாந்த்

ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பிலோ, மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகரோ எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை இது குறித்து கடிதம் ஒன்றே வெளியாகியுள்ளது.

rajinikanth new tv channel logo, ரஜினிகாந்த்

இதே போல் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சேனலின் லோகோ டிசைன்களும் வெளியாகியிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close