/tamil-ie/media/media_files/uploads/2023/08/raj.jpg)
சீமான் சர்ச்சை கருத்து: ராஜ்கிரண் பதில்
இஸ்லாமிய மக்களின் பொறுமையை, தவறாக புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாகயிருக்கும் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
”தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது” என்று சிமான் பேசியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “ இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்... இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.
"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால், பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம்.
பொறுமையை தவறாகப் புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா “ அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தியதற்காக சீமான் மனிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.