Advertisment

"ரெண்டு கட்சிகளைப் பத்தி சொல்ல ஒரு வார இதழா?” - சோ பெயரில் அரசியல் பத்திரிகை தொடங்கும் எஸ்.வி.சேகர்!

குடும்ப அரசியல் பத்திரிக்கையா...ரெண்டு கட்சிகளைப் பத்தி சொல்ல ஒரு வார இதழா?”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
"ரெண்டு கட்சிகளைப் பத்தி சொல்ல ஒரு வார இதழா?” - சோ பெயரில் அரசியல் பத்திரிகை தொடங்கும் எஸ்.வி.சேகர்!

தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலையும் தன் நுனி விரலில் வைத்திருந்தவர் சோ ராமசாமி. அரசியல் குறித்தும், அரசியல் கட்சிகள் குறித்தும், கட்சித் தலைவர்கள் குறித்தும் இவர் சொல்லும் கமெண்ட்டுகள், எதிராளியையும் ரசிக்க வைக்கும். நகைச்சுவை கலந்து விமர்சனம் செய்வதையே தனது ஆயுதமாகக் கொண்டிருந்தார்.

Advertisment

தான் எந்தக் கட்சியையும் சாராதவன் என்று கூறினாலும், பாஜகவின் நலம் விரும்பியாகவே சோ வலம் வந்தார். ஜெயலலிதாவிடம் கொண்டிருந்த அளவற்ற அன்பால், அதிமுக வளர்ச்சியிலும் பங்குக் கொண்டிருந்தார்.

நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பாக, குஜராத் முதல்வராக இருந்த போதே, 'மோடியை பிரதமராக்க வேண்டும்' என்று சோ கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அத்வானி உட்பட பல மூத்த தலைவர்கள் பாஜகவில் இருந்தபோதும், மோடியின் பெயரை சோ உச்சரித்திருந்தார். அப்போது, பிரதமர் வேட்பாளராக கூட மோடி அறிவிக்கப்படவில்லை.

ஆனால், அதற்கு பிறகு மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரதமராகவும் ஆனார். இது வரலாறு!. அந்த அளவிற்கு அரசியல் தீர்க்கதரிசியாக விளங்கியவர் சோ.

அதுமட்டுமின்றி, மோடியை 'மரண வியாபாரி' (Merchant Of Death) என்று அவரை வைத்துக் கொண்டே ஒரு விழாவில் பேசி அனைவரையும் அலற விட்டவர் சோ. மோடியே ஒரு நொடி ஜெர்க் ஆக, "Merchant of Death to Terrorism, Merchant of Death to Corruption, The Merchant of Death to Poverty and Ignorance" என்று சொல்லி அரங்கை அதிர வைத்தார்.

பன்முகத் திறமை வாய்ந்தவர், மிகச் சிறந்த தேசியவாதி, மகா துணிச்சல்காரர், மரியாதைக்குரியவர், அபிமானத்துக்கு உரியவர்’ என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டப்பட்ட சோ கடந்த 2016ம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில், பாஜக அபிமானியும், சோவின் அன்பிற்கு உரியவருமான நடிகர் எஸ்.வி.சேகர், சோ பெயரில் பத்திரிகை துவங்குகிறார். 'சோழி' என்று அதற்கு பெயரிட்டுள்ளார். ‘சோ’ என பெரிதாக போடப்பட்டு அதன் அடியில் ‘ழி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே சோழி!, CHOzi! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பத்திரிகை பற்றிய விளம்பர ஸ்லைடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆசிரியர்: எஸ்.வி. சேகர், எனப்போடப்பட்டு அதன் அருகில் ‘குடும்ப அரசியல் வார இதழ்’ என்று அந்த புத்தகத்தின் எண்ணமும், நோக்கமும் தெளிவாக்கப்பட்டுள்ளது. துக்ளக் புத்தகத்தை போலவே லே -அவுட், கார்டூன் என எல்லாமே இந்தப் புத்தகத்திலும் இருக்கும் போல் தெரிகிறது. விளம்பர ஸ்லைடும் அதைத்தான் சொல்கிறது.

இந்த ஸ்லைடில், சோ “குடும்ப அரசியல் பத்திரிக்கையா...ரெண்டு கட்சிகளைப் பத்தி சொல்ல ஒரு வார இதழா?” என்று கேட்க, அதற்கு எஸ்.வி.சேகரோ பவ்யமாக...”அப்படியில்லே குருவே...குடும்பத்தோட படிக்கக் கூடிய அரசியல் பத்திரிக்கை இது.” என்று பதில் தருவது போல் கார்டூன் வடிவமைத்துள்ளனர்.

அதன் அருகிலேயே இரண்டு கழுதைகள் “ஹையா...பக்கத்துக்கு பக்கம் வித்தியாசமான டேஸ்ட்ல நமக்கு சாப்பாடு கிடைக்கப்போவுது...” என்று குதுகலிப்பது போலும் கார்டூன் வெளியாகி உள்ளது.

S V Sheker
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment