Advertisment

அரசியல் மோதலாக மாறும் சந்தானம் பிரச்னை?

நடிகர் சந்தானத்துக்கும் பாஜக பிரமுகருக்கும் இடையேயான சாதாரண கொடுக்கல் - வாங்கல் பிரச்னையை, அரசியல் மோதலாக்க பாஜகவும், வன்னியர் சங்கமும் திட்டமிடுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor santhanam

நடிகர் சந்தானத்துக்கும் பாஜக பிரமுகருக்கும் இடையேயான சாதாரண கொடுக்கல் - வாங்கல் பிரச்னையை, மிகப்பெரிய அரசியல் கலவரமாக மாற்றுவதற்கு அடிபோடுகின்றன பாஜகவும், வன்னியர் சங்கமும்.

Advertisment

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள சந்தானம், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரும், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் சேர்ந்து, மூன்றாம்கட்டளை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய முடிவெடுத்தனர். அதற்காக, மூன்று கோடி ரூபாயை சண்முகசுந்தரத்திடம் கொடுத்துள்ளார் சந்தானம்.

Santhanam notice - pmk

ஆனால், சொன்னபடி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளாததால், அவரிடம் தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் சந்தானம். அவர் பணத்தைத் திருப்பிக் கொடுத்த சண்முகசுந்தரம், இன்னும் சில லட்சங்களைக் கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்திருக்கிறார். அதைத் திருப்பிக் கேட்க சந்தானமும், அவருடைய மேனேஜரும் சென்றபோது, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காயமடைந்த சந்தானம் மற்றும் அவருடைய மேனேஜர் இருவரும் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

எதிர்த் தரப்பில் காயமடைந்த சண்முகசுந்தரம் மற்றும் அவருடைய வக்கீல் பிரேம் ஆனந்த் இருவரும் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பு சார்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ஆல்பின்ராஜ் இதுகுறித்து விசாரித்து வருகிறார். இரு தரப்பு மீதும் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான சந்தானம் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Santhanam - Bjp Poster

சண்முகசுந்தரத்தின் வக்கீலான பிரேம் ஆனந்த், பாஜக கட்சியில் தென்சென்னை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். எனவே, சந்தானம் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பாஜகவினர் குழும, வேறு காரில் ஏறி தப்பினார் சந்தானம். பாஜக உறுப்பினர் தாக்கப்பட்டதால், இதுகுறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்தரராஜன். மேலும், சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தானத்துக்கு ஆதரவாக வன்னியர் சங்கம் களத்தில் குதித்துள்ளது. நடிகர் சந்தானத்தை ஏமாற்றி மோசடி செய்த பிரேம் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால், இரண்டு பேருக்கும் இடையே உள்ள பிரச்னை, அரசியல் மோதலாக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் நடிகர் சந்தானம் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக அறியப்படாமல் இருந்தார். இப்போது அவருக்கு ஆதரவாக வன்னியர் சங்கம் களம் இறக்கியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Bjp Santhanam Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment