/tamil-ie/media/media_files/uploads/2018/10/actor-sarathkumar.jpg)
actor sarathkumar, சரத்குமார்
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண் இனத்தினை மதிப்பவன் நான், சின்மயி கூறியது போல அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என்பது அந்த இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும் என தெரிவித்தார்.
மி டூ விவகாரம் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து :
ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்... என்னை பொறுத்தவரை, அந்த சின்மயி அன்றைக்கே ஏன் புகார் செய்யவில்லை, என்று மனசுக்குள் கேள்வி தோன்றினாலும், இப்போதாவது வந்து சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. பிறருக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என அவர் கூறினார்.
முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணை இருந்தால் கூட, அந்த விசாரணையில் சி.பி.ஐ என்ன கண்டுபிடிக்கின்றது என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நான்கரை வருடங்களாக மத்திய அரசு என்ன செய்துள்ளது. மத்திய அரசின் பிரதமர் மோடி என்ன செய்துள்ளார். பொதுமக்கள் கணக்கில் 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக சொன்னார். அதுவும் செய்யவில்லை. இதுபற்றி கேட்டால் எச்.ராஜா அப்படி சொல்லவே இல்லை என்கிறார் என அவர் சுட்டிக்காட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.