/tamil-ie/media/media_files/uploads/2022/02/sarathkumar759.jpg)
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2 நாட்களாக, அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
Good evening my near and dear friends relatives and my brothers and sisters In the political party,this evening I have tested positive and have self isolated myself,I humbly request all the dear ones who have been in contact for the past week to test yourself immediately
— R Sarath Kumar (@realsarathkumar) February 1, 2022
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.