scorecardresearch

சரத் பாபு உடல் சென்னையில் இன்று அடக்கம்

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கிண்டியில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

sarath babu

தமிழ் சினிமா உலகில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ திரைப்படத்தின் அறிமுகமான நடிகர் சரத் பாபு, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்து இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து பிரபலமானார்.

‘முத்து’ திரைப்படத்திலும் ரஜினிகாந்த்துக்கு எஜமானாக நடித்திருப்பார். மேலும் இதுபோன்ற ஹிட் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து, சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது.

இதற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் தொடங்கி தமிழக முதல்வர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

அவரது உடலுக்கு சென்னை டி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9.30 மணியிலிருந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது, மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கிண்டியில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor sarathu babu final respect at chennai residence