வீடியோ : எது ஆன்மீக அரசியல்? ரஜினிக்கு பாடம் எடுத்த நடிகர் சத்யராஜ்!

திமுக தலைவர் கருணாநிதி 95வது பிறந்தநாள் கடந்த 3ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெரியார் திடலில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நளைபெற்ற விழாவில் அரசியல் பிரமுகர்கள் உட்பட சினிமா துறையினரும் பங்கேற்றனர். பிறந்தநாள் விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நாட்டில் உள்ள நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகும் போதுதான் புரட்சி வெடிக்கும். புரட்சியால் நாடு சுடுகாடாக மாறாது. சுடுகாடாக நாடு மாறிவிடக்கூடாது என்பதற்காகத் தான் போராடுகிறோம்.” என்று கூறினார்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் சத்யராஜ் கடுமையாக சாடினார். அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினிகாந்த் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தார். அதற்கு, “அரசியலுக்கு வந்தவுடன் முழுமையாக ஈடுபட வேண்டும். அரசியல் என்று கூறி அதற்குப் புதிதாக பெயர் வைத்தார் அது பிஸினஸ். அது போல ஒன்றுதான் இந்த ஆன்மீக அரசியல். மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது ஆன்மீக அரசியல் இல்லை. அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மீக அரசியல்.” என்று சாடினார்.

வீடியோ : நன்றி நியூஸ்18 தமிழ்

×Close
×Close