நடிகர் சத்யராஜ் தன்னை எப்போதும் ஒரு பெரியாரிஸ்ட்டாகவும் திராவிட இயக்க ஆதரவு தமிழ் தேசியவாதியாகவும் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். பெரியார் படத்தில் பெரியாராக நடித்தவர்.
Advertisment
அண்மையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு முதல்வரை வாழ்த்திப் பேசினார். அதே போல, நடிகர் சத்யராஜ், விசிக தலைவர் திருமாவளவன் உடன் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக அரசியலாகவும் நட்புடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சத்யராஜ் இன்று (ஏப்ரல் 10) திடீரென சென்னையில் உள்ள விசிகவின் தாய்மண் அலுவலகத்துக்கு வந்து விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்தார். திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் சத்யராஜ், திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திருமா இரவு பாடசாலைக்கு கணினி வழங்கினார். கணினியை திருமா இரவு பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
Advertisment
Advertisements
நடிகர் சத்யராஜ் மற்றும் திருமாவளவனின் திடீர் சந்திப்பும், சத்யராஜ், திருமா இரவு பாடசாலைக்கு கணினி வழங்கி உதவியது அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"