Advertisment

மு.க.ஸ்டாலினை சந்தித்த சத்யராஜ் மகள்

அவர் மீது, அவரது அரசியல் பயணத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது.

author-image
WebDesk
Mar 19, 2019 12:25 IST
Divya Sathyaraj Meets MK.Stalin

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் உட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

Advertisment

இவர் சமீபத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு, தி.மு.க-வில் திவ்யா சேர்ந்திருப்பதாக செய்திகளும் வலம் வந்தன.

காரணம், முன்பே சில பேட்டிகளில் தனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாகக் கூறியிருந்தார் திவ்யா. அதோடு, மக்களவை தேர்தல் நேரம் என்பதால், இந்த சந்தேகம் மேலும் அதிகரித்தது.

தற்போது திவ்யா, “எங்களுடைய குடும்பத்துக்கும், கலைஞரின் குடும்பத்துக்கும் இடையே நீண்ட கால நட்பு இருக்கிறது. இந்த நட்பு கலைஞர் இயக்கத்தில் எனது தந்தை நடித்தபோது தொடங்கியது. இப்போது நான் ஸ்டாலினை சந்தித்தது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவதற்காக மட்டுமே.

எனது தொழில் பற்றி ஸ்டாலினிடம் பேசினேன். தமிழகத்தில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேப்படுத்துவது தொடர்பான எனது திட்டங்கள் குறித்து விவரித்தேன். அவர் என்னை ஊக்குவித்தார். அவர் மீது, அவரது அரசியல் பயணத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால், இந்தச் சந்திப்பின் போது நிச்சயமாக அரசியல் பேசவில்லை” என ஸ்டாலினுடனான அந்த சந்திப்புக்கு விளக்கமளித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, மருந்துப் பொருட்களில் ஊழல் நடப்பதாக பிரதமர் மோடிக்கு திவ்யா கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#Mk Stalin #Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment