/tamil-ie/media/media_files/uploads/2019/11/soori.jpg)
நடிகர் சூரி,சிவகார்த்திகேயன்,மதுரை,உணவகம்,அய்யன்,அம்மன்,Actor soori, Sivakarthikeyen, Amman hotel, Ayyan hotel, Madurai
நடிகர் சூரியை நமக்கு நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரியும். ஆனால், அவர் பல ஹோட்டல்களுக்கு முதலாளி என்பது மதுரை மக்களுக்கு மட்டுந்தான் தெரியும்.
2017ம் ஆண்டு மதுரை காமராஜர் சாலையில், அம்மன் எனும் பெயரில் ஹோட்டலை, நடிகர் சூரி திறந்தார். வியாபாரம் அமோகமாக நடைபெற, மதுரையின் மற்ற பகுதிகளான மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை பகுதிகளிலும் ஹோட்டல்களை திறந்து வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.
சைவ ஹோட்டல்களை மட்டும் திறந்து வந்த நடிகர் சூரி, தற்போது மதுரையில் முதன்முறையாக அசைவ ஹோட்டலை திறந்துள்ளார். சைவ ஹோட்டல்களுக்கு அம்மன் என்று பெயரிட்டு வந்த நடிகர் சூரி, அசைவ ஹோட்டலுக்கு அய்யன் என்று பெயர் வைத்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தின் அருகே கட்டப்பட்டுள்ள புதிய சைவ மற்றும் அசைவ ஹோட்டல்களை, பொதுமக்கள் முன்னிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். ஹோட்டல் திறப்பு விழாவில் பங்கேற்ற மக்களுக்கு நடிகர் சூரி, நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.