/indian-express-tamil/media/media_files/2025/08/20/surya-2025-08-20-14-44-26.jpg)
"கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது" என்று அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் என்று தெரிவித்துள்ளது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா அரசியல் களம் காண்கிறார் என்ற செய்தி தவறானது என்றும், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி பொய்யானது என்றும், உண்மைக்கு மாறான போலியான செய்தி மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் இன்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடத்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்
No Politics , Only Cinema
— Kollywood Cinima (@KollywoodCinima) August 20, 2025
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை #Suriya@SuriyaFansClubpic.twitter.com/RwXfKjOA4e
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.