நடிகர் சூர்யா வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Actor Surya TNagar House gets Police Protection over Jai Bhim movie தற்போது, தி.நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு வெளியே 5 போலீசார் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.

Actor Surya TNagar House gets Police Protection over Jai Bhim movie
Actor Surya TNagar House gets Police Protection over Jai Bhim movie

Actor Surya TNagar House gets Police Protection over Jai Bhim movie : சூர்யா நடிப்பில் வெளியான ஜெயபீம் திரைப்படம் ஓடிடி தலத்தில் வெளியான நாளிலிருந்து இப்படக்குழுவினர் பல்வேறு விதமான சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சூர்யாவின் தி.நகர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டிஜே ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் காவல் சித்திரவதைகளைப் பற்றி படம் பேசுகிறது. இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத அளவிற்கு வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், குறிப்பிடப்பட்ட  காட்சிகளை மாற்றியமைத்தார். இருப்பினும், இப்படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாகத் தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படம் பாமகவினரால் நிறுத்தப்பட்டது. மேலும், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, வன்னியர் சமூகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக சூர்யா, ஜோதிகா, இயக்குநர் டி.ஜே.ஞானவேல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியோருக்கு கடந்த நவம்பர் 15-ம் தேதி வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ஜெய் பீம் பட சர்ச்சையில் நடிகர் சூர்யாவுக்குப் பல மிரட்டல்கள் வந்தன. இதனால் தற்போது, தி.நகரில் உள்ள சூர்யாவின் வீட்டிற்கு வெளியே 5 போலீசார் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor surya tnagar house gets police protection over jai bhim movie

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com