Advertisment
Presenting Partner
Desktop GIF

ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வடிவேலு வழக்கு; பதில் அளிக்க அவகாசம் கேட்ட சிங்கமுத்து - ஐகோர்ட் அனுமதி

யூடியூப் சேனல்களில் தன்னை மிகவும் தரக்குறைவாக பேசிய நடிகர் சிங்கமுத்து தனக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு தர உத்தரவிடக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vadi singa

ரூ.5 கோடி நஷ்டஈடு தர உத்தரவிடக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களில் தன்னை மிகவும் தரக்குறைவாக பேசிய நடிகர் சிங்கமுத்து தனக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு தர உத்தரவிடக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக, பதில் அளிக்க அவகாசம் கேட்ட நடிகர் சிங்கமுத்துவுக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றம் 2 வாரங்களில் பதில் அளிக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  நான் 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி படங்களாக அமைந்தன.

இந்த சூழலில், எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு, அந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில், என்னை மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 
இதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேல் தொடர்ந்த வழக்கு இன்று (செப்டம்பர் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து கோரினார்.

இதையடுத்து, நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment