/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-16T080250.537.jpg)
Vadivelu video, vadivelu tamil video, vadivelu Tamil video coronavirus, actor vadivelu coronavirus video, Tamil video news, tamil viral news, Tamil trending news
Actor Vadivelu Latest Tamil Video : கொரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடிகர் வடிவேலு உருக்கமான தனது குரலில் பாடி வெளியிட்டுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சீனாவில் தோன்றி உலகையே அசைத்து பார்த்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின் பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவுதான் என்றாலும், தடுப்பு நடவடிக்கைகளில் அதிகளவு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் இது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்த இரண்டாவது விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவை வெல்வோம் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ..
கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/rD486Yek42
— Actor Vadivelu (@VadiveluOffl) April 15, 2020
26 வினாடிகள் கால அளவிலான இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. அதிலும் வைகைப்புயல் வடிவேலு, தனது உருக்கமான குரலில் பாடியுள்ளது கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் என்பதில் யாவருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.