வைரஸாக வந்த நீ, பாடம் புகட்டிவிட்டாய் – வடிவேலுவின் உருக்கமான குரலில் வைரலாகும் வீடியோ

Tamil Nadu Coronavirus Latest Video : கொரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடிகர் வடிவேலு உருக்கமான தனது குரலில் பாடி வெளியிட்டுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Vadivelu video, vadivelu tamil video, vadivelu Tamil video coronavirus, actor vadivelu coronavirus video, Tamil video news, tamil viral news, Tamil trending news
Vadivelu video, vadivelu tamil video, vadivelu Tamil video coronavirus, actor vadivelu coronavirus video, Tamil video news, tamil viral news, Tamil trending news

Actor Vadivelu Latest Tamil Video : கொரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடிகர் வடிவேலு உருக்கமான தனது குரலில் பாடி வெளியிட்டுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சீனாவில் தோன்றி உலகையே அசைத்து பார்த்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின் பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவுதான் என்றாலும், தடுப்பு நடவடிக்கைகளில் அதிகளவு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் இது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்த இரண்டாவது விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவை வெல்வோம் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ..

26 வினாடிகள் கால அளவிலான இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. அதிலும் வைகைப்புயல் வடிவேலு, தனது உருக்கமான குரலில் பாடியுள்ளது கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் என்பதில் யாவருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vadivelu tamil video news tamil nadu coronavirus

Next Story
நிவாரணம் வழங்க தடையில்லை; மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் – தமிழக அரசு பதில்coronavirus lock down, chennai high court, tamil nadu news, நிவாரணப் பொருட்கள் வழங்க தடையில்லை, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு, latest tamil nadu news, no ban to corona virus relief distribute, tamil nadu government, lates coronavirus news, chennai high court news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express