சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!

சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய்

நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், அஜித், ஷாலினி, சூர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அந்த வகையில், நடிகர் விஜய் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

நீலாங்கரையில் உள்ள விஜய் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்தார். முகக் கவசம் அணிந்தபடியே வந்த அவர் வாக்களித்துவிட்டு சென்றார். பின்னர் வெளியே வந்த அவர், ரசிகர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி வீடு திரும்பினார்.
மேலும் போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்த காரணத்தால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் பெரட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததாகவும், சூற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வந்தார் என பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vijay cycles to polling booth to cast his vote

Next Story
மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் மரணம்: இபிஎஸ், தமிழிசை, ஸ்டாலின் இரங்கல்News 7 editor Kosalram passed away
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com