/tamil-ie/media/media_files/uploads/2018/12/cats-7.jpg)
Actor Vijay Fans Arrested
Actor Vijay Fans Arrested : சர்கார் என்றாலே சர்ச்சை தான். படத்தின் ஆரம்பம் முதலே சர்ச்சை தான். படத்தின் முதல் போஸ்டர் வெளியானவுடன் சிகெரெட் தான் முதல் சர்ச்சை.
தமிழக அரசு இலவசமாக மக்களுக்கு அளித்த பொருட்களுக்கு எதிராக சில காட்சிகள் படத்தில் இடம் பெற்றன. இதற்கு தமிழக அமைச்சர்கள் சார்பில் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.
Actor Vijay Fans Arrested : சர்கார் சர்ச்சையில் விஜய் ரசிகர்கள் கைது
நடிகர் விஜயின் ரசிகர்கள் பலர், தமிழக அரசு இலவசமாக அளித்த பொருட்களை தூக்கி எறிந்து அதை காணொளி காட்சியாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டனர்.
விஜய்யின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு இரு இளைஞர்கள் கையில் அரிவாளுடன் மோசமான வார்த்தைகள் பேசி மிரட்டும் தொனியில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய் மற்றும் வீடியோவினை பதிவு செய்த அனிஷேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சஞ்சய் மற்றும் அனிஷேக்கினை கைது செய்துள்ளது காவல்துறை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.