திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்த தாகவும் இது இந்து மக்களின் இடையே தேவையற்ற ஒரு வேறுப்பை அவரின் பேச்சு காட்டியுள்ளது.
இது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் முன்னனி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.ஜி. நாராயணன் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன் ஜாமீன் :
தற்போது இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி எஸ்.ஏ. சந்திரசேகர் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனவும், எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற சுபாதேவி, எஸ்.ஏ சந்திரசேகர்க்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தாம் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவும், உரிய முறையில் குறிப்பிட்ட கால அளவிற்குள் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையினை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரின் புகார் மனு மீது விருகம்பாக்கம் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்து மூன்று மாதத்திற்குள் இறுதி விசாரணை அறிக்கையினை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.