நடிகர் விஜய் மாணவர்களுக்காக நடத்தும் பாராட்டு விழாவில், முழுவதும் சைவ உணவு வழங்கப்படுகிறது. என்ன உணவு வழங்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று மார்க் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் செண்டரில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே இந்த நிகழ்ச்சியில் வழங்ப்படும் உணவுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று சைவ சாப்பாடு மட்டுமே மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது. வடை, அப்பளம், அவியல், வெற்றிலை, பாயாசம், சாதம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவயல், தயிர் பச்சடி, பக்கோடா மெனுவில் உள்ளது. மேலும் அவரை மணிலா பொறியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆணியன் மணிலா, தக்காளி ரசம் என்று 15 வகையான உணவுகள் இன்று வழங்கப்படுகிறது.