சி.ஏ.ஏ. சட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத் தக்கத அல்ல.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ. சட்டம் நாடு முழுக்க இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தச் சட்டம் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்படும் என அமித் ஷா கூறியிருந்தார். இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு நாடு முழுக்க பெரும் எதிர்ப்பு உள்ளது. இதனால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படலாம் என அச்ச உணர்வு உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“