பகலில் சென்றால் கூட்டம் கூடும் என்று நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய்... ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுக்கோள்!

அவர்களை தடுத்து நிறுத்தியதோடு புகைப்படம் ஏதும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் நள்ளிரவு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி நடந்த 100 ஆவது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்தவர்களின் குடும்பங்களை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சென்று விசாரித்தார்.

இந்நிலையில் தான், நடிகர் விஜய் நேற்று (5.6.18) நள்ளிரவு தூத்துக்குடிக்கு சென்று, மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.பின்னர், அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

அதே போன்று சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் செய்தார். விஜய்யை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை ஃபோட்டோ எடுக்க முயன்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியதோடு புகைப்படம் ஏதும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், பகலில் வந்தால் கூட்டம் திரண்டு விடும் என்பதற்காக இரவில் இருசக்கர வாகனத்தில் அவர்களின் வீட்டிற்கு சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close