தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் காலை 9.15 மணிக்கு கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிடுகிறார்.
இந்நிலையில் அவர் வீட்டு அமைந்திருக்கும் சென்னை நீலாங்கரையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட உள்ளார். ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் இன்று கொடி ஏற்றப்பட்டு , கட்சிக்கான பாடல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விஜய் இருக்கும் வீட்டின் அருகே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ளனர். உதவி ஆணையர் தலைமையில் காவலர்கள் , நடிகர் விஜய் செல்லும் பிரதான சாலையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க 300 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பாக்சர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று காலை 9.15 மணிக்கு விஜய் கொடியேற்ற உள்ளார்.
இந்த அறிமுக விழாவிற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சீமான் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“