Advertisment

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் நிவாரண உதவிகளை வழங்கிய நடிகர் விஜய்

நடிகர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

author-image
WebDesk
New Update
Actor Vijay meets flood affected people of Southern Districts Tamil News

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கே.டி.சி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

vijay: தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment

மழை வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.

இதனிடையே, நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால், நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர்.

இந்த நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். அதன்படி, திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்கினார். 

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கே.டி.சி நகர் மாதா மஹாலில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment