தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து! #Viralphoto

Actor Vijay meets Thalapathy Vijay Makkal Iyakkam members viral Photo இந்தக் குறிப்போடு நடிகர் விஜய், வெற்றிபெற்றவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Actor Vijay meets Thalapathy Vijay Makkal Iyakkam members viral Photo
Actor Vijay meets Thalapathy Vijay Makkal Iyakkam members viral Photo

Actor Vijay meets Thalapathy Vijay Makkal Iyakkam members viral Photo : தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது எனலாம். நடிகர் விஜயின் ரசிகர் மன்றமான தளபதி விஜய் மக்கள் இயக்கம் (TVMI) உடன் தொடர்புடைய உறுப்பினர்கள் நடந்து முடிந்த தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்-அரசியல்வாதியான சீமானின் நாம் தமிழர் கட்சி கூட விஜய்யின் மக்கள் இயக்கத்தின் முன்பு பின்தங்கி உள்ளனர். ஒன்பது மாவட்டங்களிலும், குறிப்பாக கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் TVMI உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் மொத்தம் 169 வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும் அவர்களில் 121 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் தெரிவித்தார். இதனை அடுத்து, வெற்றி வாகை சூடிய அனைவரும் நடிகர் விஜயை நேரடியாக சந்தித்து அவருடைய வாழ்த்துகளைப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக புஸ்ஸி என் ஆனந்த் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் தளபதி சார்பில் நன்றி என்றும் வெற்றி வாகை சூடிய 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மக்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் மத்திய மாநில அரசுகளுக்குக் கொண்டு சென்று விஜயின் உத்தரவின்படி அவற்றை சரிசெய்ய உழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குறிப்போடு நடிகர் விஜய், வெற்றிபெற்றவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vijay meets thalapathy vijay makkal iyakkam members viral photo

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com