விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் இவர் கட்சி தொடங்கியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். மேலும் ரசிகர்களும் வரவேற்றனர். சில எதிர்ப்புகளும் வெளிப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/RwRm0jagra9Zx1tKLUGw.jpg)
இந்நிலையில் அவர் கட்சி தொடங்கியத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாடு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“