நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு 2-ம் கட்ட கல்வி விருது மற்றும் உதவித் தொகை வழங்கும் விழா திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) நடக்கிறது. தமிழ்நாட்டில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விஜய் கல்வி உதவித் தொகை வழங்குகிறார்.
முதற்கட்டமாக ஜுன் 28-ல் 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்று 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்கி மாணவர்களிடையே உரையாற்றுகிறார்.
19 மாவட்டத்தில் இருந்து 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல். மாணவர்கள், பெற்றோரை நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு பேருந்துகள் மூலம் த.வெ.க. நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“