Premalatha Vijayakanth | மறைந்த நடிகரும், தேமுதிக அரசியல் இயக்கத்தின் நிறுவனருமான நடிகர் விஜயகாந்த்துக்கு மே 9ஆம் தேதி பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க, உணர்ச்சி வயப்பட்ட பிரேமலதா கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டார்.
அப்போது ஒரு நிமிடம் அந்த விருதை விண்ணை நோக்கி, கேப்டன் விஜயகாந்த்துக்கு சமர்பித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “இந்த விருதை விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க தொண்டர்களுக்கு சமர்பிக்கிறேன்” என்றார்.
இந்த நிலையில், பிரேமலதா மற்றும் அவரது மகன், தம்பி ஆகியோருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது இல்லத்தில் விருந்து அளித்தார்.
முன்னதாக மே 9ஆம் தேதி காலை சென்னையில் பேட்டியளித்த பிரேமலதா, “விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவர், இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் உள்ளது.
விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜய பிரபாகரன் ஒரு மாதத்துக்கு முன்னரே தேர்தல் பணிகளை மேற்கொண்டார். அங்கு அவர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“