நடிகர் விஜய்யின் உதவியாளர்களுள் ஒருவராக இருந்து வருபவர் ராஜேஷ். இவர் மீது பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், " ராஜேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார்; என்னிடம் இருந்த பணத்தையும் அபகரித்துள்ளார். என்னை ஏமாற்றிய ராஜேஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு குறித்து விசாரணை நடத்துமாறு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு, மாநில காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, பரங்கி மலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷை கைது செய்தனர்.
தொடர்ந்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் விஜயின் உதவியாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“