நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்திவருகிறார். இந்தக் கட்சியை நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், கட்சி சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான விழா முதல்கட்டமாக நாளை (ஜூன் 28,2024) சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. இதில், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் பங்குபெற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“