நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளை திரைப்படங்களின் மூலமாக நமக்கு வழங்கி வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று அதிகாலையின் காலமானார். நடிகர் விவேக் குறித்து, திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் நினைவுக் கூர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் விவேக், முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்திக்கு சிறு வயதில் எழுதிய கடிதத்தை அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட விவேக், நீலகிரி மாவட்டத்தின் குன்னூரை அடுத்த, ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜயா ஜூனியர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். அப்போது, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்திக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் என்று கூறியதை நினைவில் வைத்திருந்த அவர், தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பாரத பிரதமரான இந்திரா காந்திக்கு, வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் “My Birthday Your Birthday Same Birthday, I Wish You You Wish Me" விவேக் குறிப்பிட்டிருந்தார்.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விவேக்குக்கு, இந்திரா காந்தி கைப்பட கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தை தனது வாழ்நாள் முழுவதும் நீங்காத நினைவாக பத்திரப்படுத்தி வைத்திருந்தார், நடிகர் விவேக்.
நடிகை சுஹாசினி தொகுத்து வழங்க, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் விவேக், இந்திரா காந்தி தனக்கு கடிதம் எழுதிய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். அப்போது, நடிகை சுஹாசினி விவேக்கிடம், ‘இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, உங்களுக்கு யாரோ லெட்டர் எழுதுனாங்களாமே என வினவ, அமாம், என் மாமன் பொண்ணு எழுதுச்சி என தனக்கே உண்டான நகைச்சுவை பாணியில் பதிலளித்ததை, அவரின் ரசிகர்கள் வாழ்நாளில் மறக்க இயலாத தருணம் ஆகும். பின், நேரு எனக்கு மாமா, அவரோட பொண்ணு எனக்கு மாமன் பொண்ணு தானே என கலகலப்பான விளக்கத்தையும் அளித்தது, அவரது வாழ்நாளில் மங்காத காட்சிகள்.
அதனைத் தொடர்ந்து அந்த கடிதத்தை எப்படி வாங்குனீங்க என சுஹாசினி வினவ, ‘கடிதத்தை எழுதியதை மறந்து, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ராணுவ வீரர்கள் குதிரையில் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.
விவேக், இரண்டு வயதில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தை பற்றிய சுவாரஸ்யங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் pic.twitter.com/OolSqbR5fI
— Zee Tamil (@ZeeTamil) June 16, 2017
அவர்கள் விவேகானந்தன் எங்கே என கேட்க, போலீஸ் என்னை தேடுவதாக நினைத்து, அவர்களுக்கு தெரியாமல் மறைந்துக் கொண்டேன். பின், அம்மா டேய் ராஜு வாடா, இந்திரா காந்தி அம்மா கிட்ட இருந்த உனக்கு லெட்டர் வந்துருக்குடா என சொல்லிய பிறகே ராணுவ வீரர்களை சந்தித்தேன்’ என தனது நினைவலைகளைப் பகிர்ந்துக் கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.