Advertisment

ஸ்டாலினுடன் நடிகர் விவேக் மனைவி சந்திப்பு: சாலைக்கு விவேக் பெயர் சூட்ட வேண்டுகோள்

நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் – முதலமைச்சரிடம் விவேக் மனைவி வேண்டுகோள்

author-image
WebDesk
New Update
ஸ்டாலினுடன் நடிகர் விவேக் மனைவி சந்திப்பு: சாலைக்கு விவேக் பெயர் சூட்ட வேண்டுகோள்

Actor Vivek family request to Stalin for naming road: நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து, விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்தவர் விவேக். தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். மேலும், சமூக கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், அனைவருக்கும் புரியும் வகையில் கூறியவர் விவேக்.

நடிப்பதோடு மட்டுமல்லாமல், பல சமூக பணிகளையும் விவேக் செய்து வந்தார். அதில் முக்கியமான சுற்றுச் சூழல் பணி. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அறிவுரையின் படி தமிழக முழுவதும் மரக்கன்றுகளை நட்டவர் விவேக். அவர் தன் வாழ்நாளில் 30 லட்சத்திற்கு அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அறநிலையத் துறைக்கு 4 தளங்களுடன் புதிய கட்டிடம்: பூமி பூஜையில் ஸ்டாலின் பங்கேற்பு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரைத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவேன் என்பதை இலக்காக கொண்டு நடிகர் விவேக் செயல்பட்டு வந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை இன்று அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதல்வர் உடனான இந்த சந்திப்பின்போது, விவேக்கின் மகள் அமிர்தா நந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்க நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும் விவேக்கின் ரசிகர்களும் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Stalin Vivek
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment