குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீர் மயக்கம்; விவேக் உடல்நிலை குறித்து பி.ஆர்.ஓ விளக்கம்

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பி.ஆர்.ஓ நிகில் முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

actor vivek hospitalized,vivek pro nikil murugan, vivek pro nikil murukan press meet, actor vivek, comedy actor vivek, actor vivek affected by heart attack, நடிகர் விவேக், நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி, விவேக் பிஆர்ஓ நிகில் முருகன், விவேக் உடல்நிலை, vivek, tamil cinema news, விவேக் மருத்துவமனையில் அனுமதி, சென்னை ,actor vivek news, vivek admitted in hospital, chennai

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய பி.ஆர்.ஓ நிகில் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து விவேக்கின் உடல்நிலை குறித்து கூறினார்.

நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக ஏராளமான ரசிகர்களை தனது நகைச்சுவையால் கவர்ந்த விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் விவேக்கின் மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ) நிகில் முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர் விவேக் சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக நடிகர் விவேக்கின் மக்கள் தொடர்பு (பி.ஆர்.ஓ) அலுவலர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் பி.ஆர்.ஓ நிகில் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நடிகர் விவேக் இன்று காலை குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சோர்வடைந்து மயக்கம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் அவரை உடனடியாக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் பரிசோதனை செய்து இப்போது ஆஞ்ஜியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லியிருகிறார்கள். அவர் சுய நினைவுடன் இருக்கிறார். நன்றாக பேசிக்கொண்டிருக்கிறார். விரைவில் ஆஞ்ஜியோ சிகிச்சை முடிந்து குணமடைந்து விரைவில் ஊடகங்களை சந்திப்பதாக சொல்லியிருகிறார். அவர் தற்போது ஆஞ்ஜியோ முடிந்து சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார். ” என்று கூறினார்.

நடிகர் விவேக் சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக பி.ஆர்.ஓ நிகில் முருகன் தெரிவித்திருப்பது விவேக்கின் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor viveks pro says vivek health conditions well

Next Story
வேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனைcoronavirus, tamil nadu, covid 19, coronavirus cases increased in tamil nadu, கொரோனா வைரஸ், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை, தமிழக அரசு, tamil nadu govt discuss to impose additional restriction
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com