நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
குஷ்பூ பிஸியாக சினிமாவில் நடித்த காலத்திலும் சரி, அரசியலுக்கு வந்த பிறகும் சரி, அவரது ஆக்டிவான செயல்பாடுகளால் எப்போதும் லைம் லைட்டில் இருப்பவர். பல சர்ச்சையான கருத்துகளையும் துணிச்சலாக வெளிப்படுத்தியவர். அதற்காக பல எதிர்ப்புகள் வந்த போதும், தன்னிலையில் இருந்து பின்வாங்காமல் இருப்பது இவரது ஸ்பெஷல்.
அரசியலில் இருப்பதால் அரிதிலும் அரிதாக சினிமாவில் தலை காட்டி வருகிறார். ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு சர்பிரைஸாக ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல வருடங்களுக்கு பிறகு ‘அண்ணாமலை’ காம்போவை திரையில் ரசிகர்கள் காணவிருக்கின்றனர்.
இந்நிலையில், குஷ்பூவுக்கு, அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Very happy to share with you that I have been conferred with #Doctorate by the #InternationalTamilUniversityUSA #Humbled #Grateful #Gratitude ???????????????? pic.twitter.com/Opfd2q4hew
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 5, 2020
வாழ்த்துகள் டாக்டர்.குஷ்பூ!!