Advertisment

’என்னை ஏமாற்றிவிட்டனர்…பா.ஜ.க-வில் இருந்து விலகுகிறேன்’: நடிகை கவுதமி அறிவிப்பு

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
Oct 23, 2023 13:29 IST
New Update
actr

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.

Advertisment

பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். “ மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழந்த ஏமாற்றத்துடனும் நான் பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். என் வாழக்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் கூட  நான் அந்த உறுதிப்பாட்டை மதிக்கிறேன்.

இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து  எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்களில் பலர் அந்த நபரை தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

இப்போது நானும் எனது மகளும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். ஆனால் பாஜகவை சேர்ந்த கி.அழகப்பன் என்பவர் எனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை கொண்டு பெரிய அளவில் மோசடி செய்திருப்பது என்னை அச்சத்தில் தள்ளி உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் தனிமையைக் கண்டு  அழகப்பன் என்னை அணுகினார்.  ஏனெனில் நான் அப்போது என் பெற்றோர் இருவரையும் இழந்து தனியாக மட்டுமல்லாமல், கைக்குழந்தையுடன் இருந்தேன்.

அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக எங்களை வரவேற்பது போல், நடித்து, என் வாழக்கையில் நுழைந்தார். இந்த சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது பல நிலங்களின்  பத்திர ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன்.

நீதி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் தமிழ முதல்வர் மீது, காவல்துறை மீதும், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அழகப்பன் மீது புகார்களை அளித்துள்ளேன்.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தலைமை கேட்டுக்கொண்டபடி, ராஜபாளையம், தொகுதியின் வளர்ச்சிக்காக பாஜக சார்பில் போட்டியிட உறுதியளித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்தேன். ஆனால் கடைசி நிமிடத்தில்  எனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டது.

கடந்த 25 வருடங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தும், தற்போது வரை முழுமையான ஆதரவு இல்லை. மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் கடந்த 40 நாட்களாக நீதியை ஏமாற்றி, தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கு ஆதரவாக உள்ளதை நினைக்கும்போது மனம் உடைந்துவிட்டது.

நான் இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்ததிலும் எழுதுகிறேன். அதேநேரத்தில் இதில் உறுதியாக உள்ளேன்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment