Tn Bjp | பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன், 2022ஆம் ஆண்டு நடிகை ஜெயலட்சுமி மீது சென“னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், “சினேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்டார் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ஜெயலட்சுமி, சினேகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அந்தப் புகாரில், சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடிகை ஜெயலட்சுமி திருமங்கலம் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தற்போது வரை விசாரணை நடந்துவருவதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக கூறப்பட்டன.
இந்த நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
புகார் விவரம்
நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மோசடி செய்தது அம்பலமான நிலையில் திருமங்கலம் போலீசார் ஜெயலட்சுமி கைது செய்து, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“