பா.ஜ.க.-வில் இணைந்த நடிகை கஸ்தூரி, திருநங்கை நமீதா மாரிமுத்து- வாழ்த்தி வரவேற்ற நயினார் நாகேந்திரன்

நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகியோர் இன்று சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தனர்.

நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகியோர் இன்று சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தனர்.

author-image
WebDesk
New Update
Actress Kasthuri BJP Nainar Nagendran Namitha Marimuthu

Actress Kasthuri BJP Nainar Nagendran Namitha Marimuthu

திரையுலகில் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் தனது துணிச்சலான கருத்துக்களுக்காக அறியப்பட்ட நடிகை கஸ்தூரி, தற்போது தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில், கஸ்தூரியுடன் இணைந்து திருநங்கை சமூக செயற்பாட்டாளரும், நமிஸ் சவுத குயின் இண்டியா (Namis South Queen India) நிறுவனத்தின் தலைவருமான நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தார். 

இதுதொடர்பாக, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது X பக்கத்தில், "நடிகை திருமதி. கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வந்த கஸ்தூரி, தற்போது ஒரு அரசியல் கட்சியின் அங்கமாக மாறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. சமூக செயற்பாட்டாளர் என்ற முறையில், அவர் தனது அரசியல் பயணத்தின் மூலம் மக்களுக்கு எத்தகைய பங்களிப்புகளை வழங்குவார் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். 

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: