/indian-express-tamil/media/media_files/2024/11/04/eroRCvLOVxocUYIORR2t.jpg)
பிராமணர்கள் பாதுகாப்பு கோரியும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரக் கோரியும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, “ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும்” என கேள்வி எழுப்பி இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரிக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு நடிகை கஸ்தூரி, தனது பேச்சுக்களை சிலர் திரித்து வெளியிட்டதாக எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
தமிழ் பேசும் தெலுங்கு பூர்வீக மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி செய்தியாளர்கள் சந்தித்து விளக்கம் அளித்தார்.
நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் பெருவாரியாக தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள். என் புகுந்த வீடு தெலுங்கு பேசும் ஒரு வீடு. என் மகள்களுக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் இரண்டு கண்களாக மதித்து வளர்ந்து வருகிறார்கள். நான் தமிழச்சி, ஆனால், இங்கே இனவாதத்தை நான் பேசவில்லை.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகை கஸ்தூரி, “எனக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரம் இது. தெலுங்கு இனத்தையோ, தெலுங்கு மக்களையோ நான் தவறாக பேசவில்லை. அது திரித்து பரப்பப்படுகிறது. எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன்; இதற்கு அச்சப்படமாட்டேன். தமிழர்களை, தமிழர்கள் இல்லையென்று சொல்லக்கூடிய திராவிட மாடல், திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நாங்கள் சொல்கிறோம். தெலுங்கர்களை பற்றி நான் பெருமையாக தான் பேசினேன்.” என்று கூறினார்.
மேலும், “பிராமணர்கள் மீது மட்டும் ஏன் வன்மம் காட்டப்படுகிறது. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமளிக்காதது ஏன்?. பிராமணர்களை அவதூறாக பேசும்போது எங்கே சென்றீர்கள்?” என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.