/indian-express-tamil/media/media_files/R6nGA5CO6frKnrOPKyTj.jpg)
இந்தியா கூட்டணி ஹேஷ்டேக் விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
kushbhu | Lok Sabha Election 2024:தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகை குஷ்பு. அரசியலில் கால் பதித்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய அவர் தற்போது பா.ஜ.க-வில் சேர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தனது குடும்பத்துடன் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார் குஷ்பு. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த குஷ்பு, பின்னர் தேர்தல் ஆணையம் வைத்திருந்த தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்டாண்டில் குஷ்பு தனது கணவருடன் புகைப்படம் எடுத்தார்.
இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம். நீங்களும் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டு #GoAndVote #Duty #Vote4INDIA, #VoteFor400Paar என்ற ஹேஷ்டேக்குளை பதிவிட்டார். அதில், #Vote4INDIA என்ற இந்தியா கூட்டணியின் ஹேஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்த பா.ஜ.க-வினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் ஒருபோதும் இந்தியா கூட்டணியை ஆதரித்ததே இல்லை. என்னுடைய நாட்டை குறிப்பிட்டே #Vote4INDIA என்று பதிவிட்டேன். நான் தெளிவாக இருக்கிறேன். குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர். நான் இன்னும் பா.ஜகவில் தான் இருக்கிறேன்." என்று விளக்கம் அளித்துள்ளார்.
#Vote4INDIA என்கிற இந்தியா கூட்டணி ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நடிகை குஷ்புவை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
We have exercised our duty, have you? #GoAndVote#Duty#Vote4INDIA#VoteFor400Paarpic.twitter.com/B9G0BoCMqX
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 19, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.