தமிழ்த்திரையுலகின் மூத்த நடிகை நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாஞ்சில் நளினி, தனது துவக்க காலங்களில், நாடகங்களில் நடித்து வந்தார். 1968ம் ஆண்டில் சிவாஜி நடித்த எங்க ஊர் ராஜா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து, அண்ணன் ஒரு கோயில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் உட்பட சில படங்களில் நடித்தார்.
Advertisment
Advertisements
தர்மயுத்தம், ஆடுபுலி ஆட்டம், ரசிகன் ஒரு ரசிகை, அன்னை அபிராமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சென்னை வேளச்சேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த நாஞ்சில் நளினி, கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைபலனின்றி அவர் காலமானார்.
மறைந்த நாஞ்சில் நளினிக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் நடக்கிறது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.