Advertisment

எம்.எஸ்.எம்.இ பெயரில் மோசடி புகார்: நடிகை நமீதா கணவர் உள்பட 2 பேருக்கு சேலம் போலீஸ் சம்மன்

எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் பெயரில் மோசடி செய்த புகார் தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவருக்கு விசாரணைக்கு ஆஜராக சேலம் சூரமங்கலம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Namitha and her husband

எம்.எஸ்.எம்.இ பெயரில் மோசடி புகார்: நடிகை நமீதா கணவர் உள்பட 2 பேருக்கு சேலம் போலீஸ் சம்மன் Image Source: Namitha Vankawala

மத்திய அரசின் சிறு குறு நடுத்த தொழில் நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) பெயரில் மோசடி செய்த புகார் தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மற்றும் மஞ்சுநாத் ஆகிய இருவருக்கு விசாரணைக்கு ஆஜராக சேலம் சூரமங்கலம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Advertisment

சேலத்தில் எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு நிறுவன ஆலோசனை கூட்டம் அக்டோபர் 30-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.  இதில் எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் தேசியத் தலைவர் முத்துராமன், தேசியச் செயலாளர் துஷ்யந்த் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான நமீதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி மற்றும்  பா.ஜ.க-வின் ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் மஞ்சுநாத் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தேசியத் தலைவ்ர் மஞ்சுநாத் மற்றும் தேசிய செயலாலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தங்களது கார், விசிட்டிங் கார்டு உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் முத்திரையான அசோக சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக காவல்துறைக்கு ரகசிய புகார் ஒன்று சென்றது.



மேலும், சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால் சாமி, எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தேசியத் தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் மீது பணம் மோசடி செய்தாதாக பரபரப்பு புகார் அளித்தார். 

அந்த புகாரில், எம்.எல்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலில் மாநில தலைவர் பதவியைத் தனக்கு தருவதாக கூறி 4 கோடி வரை பணம் கேட்டதாகவும், அதற்காக அவர்களுக்கு முதற்கட்டமாக 50 லட்சம் பணம் அளித்த நிலையில், அந்த பதவியை நடிகை நமிதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு அளித்தார்கள். இதை அறிந்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் 9 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு 41 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள் என்று பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சிலின் தேசியத் தலைவர் முத்துராமன், தேசிய செயலாளர் துஷ்யந்த் யாதவ்வை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவர்கள் இருவரையும் தமிழ்நாடு பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் ஜாமீனில் எடுத்துள்ளார்.

எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் என்ற பெயரில் இப்படி வசூலிக்கப்பட்ட பணம் பா.ஜ.க ஊடகப் பிரிவு மாநில செயலாளர் மஞ்சுநாத் மூலமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரைக்கு கொடுக்கப்பட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் அரவிந்த் தாக்‌ஷன் எக்ஸ் பக்கத்தில் பரபரப்பு குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க ஊடக பிரிவு மாநில துணைத் தலைவர் மஞ்சுநாத் மற்றும் நடிகை நமிதா கணவர் வீரேந்திர சவுத்ரி உள்ளிட்ட பலருக்கு விசாரணைக்கு ஆஜராக சொல்லி சேலம் மாநகர சூரமங்கலம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

எம்.எஸ்.எம்.இ மேம்பாட்டு கவுன்சில் பெயரில் பண மோசடி செய்து அண்ணாமலையின் யாத்திரைக்கு அளிக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நவம்பர் 8-ம் தேதி மஞ்சுநாத்தை பா.ஜ.க-வில் இருந்து நீக்கிவிட்டதாக நவம்பர் 10-ம் தேதி பா.ஜ.க தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Namitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment