scorecardresearch

Actress Nilani Attempts Suicide: நடிகை நிலானி தற்கொலை முயற்சி… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!!

TV Actress Nilani Commits Suicidal Attempt

Serial Actress Nilani Tries to Commit Suicide, நடிகை நிலானி
Nilani suicide attempt, நடிகை நிலானி

Actress Nilani Attempts Suicide: சமீபத்தில் காந்தி லலித் குமார் என்பவர் தற்கொலை வழக்கில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை நிலானி தனது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

நடிகை நிலானி தற்கொலை முயற்சி:

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் நிலானி. இவருக்கும் சின்னத்திரை இயக்குநர் காந்தி லலித் குமார் வெகு நாட்களாக உறவு இருந்து வந்தது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரின் மறைவுக்கு பிறகு, நிலானி பெரும் சர்ச்சையில் சிக்கினார். பலரும் காந்தியின் மறைவுக்கு நிலானி மட்டுமே காரணம் என்று விமர்சித்து வந்தனர். இதையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்தார்.

காந்தியை காதலித்தது உண்மைதான் ஆனால் கொடுமையையே அனுபவித்தேன் : கதறும் நிலானி

இருப்பினும் இந்த சர்ச்சைகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலானி, இன்று மதியம் தனது வீட்டில் கொசு மருத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இந்த தற்கொலை முயற்சியினால் அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

தற்போது மோசமான நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் கூறுகையில், குழந்தைகளை மனதில் கொண்டு நிலானி பொறுமையாக இருந்திருக்கலாம், அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actress nilani attempts suicide