கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை நிலானியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிலானி தற்கொலை முயற்சி:
சின்னத்திரை நடிகை நிலானி விவகாரம் அனைவரும் அறிந்த ஒன்று. உதவி இயக்குநர் காந்தி லலித் பெட்ரோ ஊற்றி தற்கொலை செய்துக் கொண்ட பின்பு ஒட்டு மொத்த விவகாரமும் வெளியில் வரத் தொடங்கியது.
காந்தி – நிலானி இருவரும் காதலித்து வந்து, அந்த காதல் சண்டையில் முடிந்து, கடைசியில் காந்தி லலித் வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை லீக் செய்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் இறப்பினால் நிலானிக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.
அதே சமயம் காந்தி லலித்தின் குடும்பத்தாரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இந்நிலையில் தான் நிலானியை குன்றத்தூர் அபிராமியுடன் உப்பிட்டு மீம்ஸ்கள், கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் உலா வரத் தொடங்கின.
இதனால், அவர், மீடியா முன், கண்ணீர்மல்க காந்தி லலித்குமார் குறித்த தகவல்களைக் கூறினார். இந்தச் சூழ்நிலையில்தான் பிரச்சனையை எதிர்க் கொள்ள முடியாத நிலானி, விரக்தியில் வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அவரைக் காப்பாற்றி, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலானின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் போலீசாரிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.அதில், “ நிலானி குடித்த கொசு மருந்தின் அளவு குறைவு என்பதால் அவரின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கொசு மருந்தை வெளியேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் நலமாக இருக்கிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் ” என்று கூறப்பட்டுள்ளது. அவர், வீட்டிற்கு திரும்பிய பின்பு அவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.